“பொறுப்புக்கு பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் தூக்கிருவோம்”… இது தளபதி உத்தரவு – பொதுச்செயலாளர் ஆனந்த்.!
தவெக-வில் பதவிக்காக நிர்வாகிகள் யாரேனும் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பை பலப்படுத்து வதற்காக கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் 234 தொகுதியில் உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை வருவதையொட்டி, தமிழகமெங்கும் பூத் கமிட்டி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால், தேர்தலுக்கு வெறும் 14 மாதங்களே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாநிலம், மாவட்டம், பகுதி, ஒன்றியம் நகரம் கிளை வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, கட்சி பதவி விரும்புவோர் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பங்கள் நெறி முறைகளுடன் வழங்கப் பட்டுள்ளன. அதன்படை, தொண்டர்களின் மனு ஆய்வு செய்யப்பட்டு கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
இந்த நிலையில், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விஜய் அறிவுறுத்தலின் பேரில் ஆலோசனை நடத்தி வருகிறார். இப்படி இருக்கையில், தற்போது பதவிக்காக பணம் வசூலித்து நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால், இன்று பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதவிகளுக்காக பணம் கொடுப்பதோ, வாங்குவதோ தலைமைக்கு தெரிய வந்தால் சம்மந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி உடனடியாக அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கு வதற்கு தலைவர் விஜய் வலியுறுத்திப்பதாக கூறினார். இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் தளபதி விஜய் வாழ்க என கை தட்டி கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
நிர்வாகிகளிடம் பணம் வாங்கினால்
கடும் நடவடிக்கை – பனையூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேச்சு @tvkvijayhq @BussyAnand pic.twitter.com/WleWJa54r7— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) January 23, 2025