நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்துக்கொள்ளட்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் வைத்து, நடிகர் விஜய் -மு.க ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளது திமுக. அமெரிக்க, ரஷ்ய அதிபர்களை திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்துக்கொள்ளட்டும்.நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது.அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…