உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி ?

Default Image

விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை  செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் அக்டோபா் மாதம் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 20 மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசினார்.

அப்போது, நடைபெறவிருக்கிற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில்  சுயேச்சையாக போட்டியிடலாம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்