தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பி உடலுக்கு, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, நடிகர் விஜயும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் விஜய் திரும்பியபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரசிகர் ஒருவர் தவறவிட்ட காலனியை நடிகர் விஜய் குனிந்து தனது கையால் காலனியை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மறைந்த பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நேற்று மாலை நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி.பி யின் உடல் நேற்று இரவு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இங்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…