ஆர்வக் கோளாறால் தான் விஜய் ரசிகர்கள் வன்முறை -அமைச்சர் கடம்பூர் ராஜூ..!
இன்று “பிகில்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி ஒளிபரப்பவில்லை என கூறி விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சென்னை விமானத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ நிபந்தனை ஏற்றால்தான் பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு அனுமதி தரப்பட்டது. முதல்வரின் ஆலோசனை பேரில் “பிகில்” திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும் விஜய் , அஜித் , ரஜினி என எந்த ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வக்கோளாறில் தான் இப்படி செய்கிறார்கள் எனக் கூறினார்.