நம்மை காக்கும் காவல் தெய்வங்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் மக்கள் இயக்க தளபதி ரசிகர்கள்…

Default Image

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, ஊரடங்கினைப் பொதுமக்கள் சரியாகக் கடைப்பிடிக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு உதவும்வகையிலும்  தமிழக சீர்மிகு காவல்துறையினர் 24 மணி நேரமும்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதிலும் குறிப்பாக, அவர்கள் நிம்மதியாக நல்ல உணவை உண்டு பல நாட்கள் ஆகியிருக்கலாம். ஆங்காங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு மக்களை பாதுகாக்கும் சிறந்த சேவையாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் காவலர்களுக்கு ஒரு நாளாவது பிரியாணி விருந்து போட வேண்டும் என்று விரும்பிய புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள 200 காவலர்களுக்கு  பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.

இது என்னடா பிரியாணி பிரியர்களுக்கு ...

இதுகுறித்து கூறிய விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பர்வேஸ், கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு அறிவித்த தீவிர  ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்று  நமக்காக காவலர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்காக பிரியாணி விருந்து போடலாம்னு முடிவு பண்ணோம். இதற்காக, 200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம் என காவலர்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்திட்டு வந்தோம். நமக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அனைவரும்  முடிந்த  உதவிகளைச் செய்ய வேண்டும்  என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்