விஜய் கல்வி விருது விழா: இதற்கெல்லாம் தடை.!

TVK - Vijay

சென்னை : 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார். தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.

திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன், பேனா, புத்தகம் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த விழாவில், செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்கள் அரங்கேறியதால் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தவெக கட்சியை தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவர் என்ன பேசுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக, காலையிலே முதல் ஆளாக விஜய் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rahul Dravid auto drier
DelhiElections 2025
ErodeEastByElection
Pooja Hegde retro
Hema Malini