அதிரும் களம்!! கோவையில் விஜய்.., துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ.!
தவெக தலைவர் விஜய் இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார்.

கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய தினம் கோவையில் ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளனர்.
அட ஆமாங்க ஒரு பக்கம், தவெக தலைவர் விஜய் கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார்.
செல்லும் வழி முழுக்க, திறந்த வாகனத்தில் விஜய் தொண்டர்களை சந்தித்தபடியே செல்கிறார். விஜய்யின் பிரசார வாகனத்தை சூழ்ந்து கொண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
மறுபக்கம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை சென்றுள்ளார். உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ நடத்தினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.