விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்…முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து.!!
நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். முக்கியமாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் கருத்து என செய்தியாளர் ஒருவர் அமைச்சர் செல்லூர் ராஜுயிடம் கேட்டார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு ” ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு இளைஞர் அவருடைய ஆசை அரசியலுக்கு வருவது வந்ததால் தான் சொல்லமுடியும். விஜய் எத்தனையோ படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார்.
விஜய் எத்தனையோ படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார். இப்படி ஹிட் கொடுத்து தான் அவர் அரசியல் கட்சியை தொடங்கி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறார். ஆனால், ஒரு சிலர் அதாவது விஷால் எல்லாம் 4,5 படங்களில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருகிறார்.
5 படங்களில் நடித்துவிட்டு நான் தான் அடுத்த முதல்வர் என்று கட்சி தொடங்கியுள்ளார். ஆனால் அந்த கட்சி எங்கு போனது என்றே தெரியவில்லை. விஜய் எவ்வளவு காலமாக நடிக்கிறார். அதனால் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரலாம்” என கூறியுள்ளார்.