த.வெ.க மாநாட்டில் விஜய்! வைரலாகும் வீடியோ!

தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் 2ஆவது நாட்களாக விஜய் முகாமிட்டுள்ளார்.

TvkVijayMaanadu

விக்ரவாண்டி: இப்படி கூட்டம் கூடுமா என்கிற அளவுக்கு த.வெ.க மாநாட்டைப் பார்க்கத் தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிமாநிலத்திலிருந்தும் மக்கள் கூட்டம் விக்ரவாண்டி வி சாலை பகுதியில் குவிந்து வருகிறார்கள். இதன் காரணமே, அந்த பகுதியில் மக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது. மாநாட்டில் விஜய் கட்சிக் கொள்கை பற்றி என்ன பேசப்போகிறார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் மாநாடு தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு நேற்றே கட்சித் தலைவர் விஜய் மாநாடு வளாகத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்தார். அத்துடன், நேற்று இரவு மாநாட்டுத் திடலில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

நேற்று மாலைப் பொழுதே மாநாடு திடலுக்குச் சென்ற விஜய், சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டுப் பிறகு சுமார் 2 மணி நேரம் அங்கு ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு விழுப்புரம், புதுச்சேரியில் தங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், மாநாடு வளாகத்திலிருந்த கேரவனில் தங்கி இருக்கிறார்.

இன்று இரண்டாவது நாளாகவும் விஜய் முகாமிட்டுத் தங்கியிருக்கும் நிலையில், அவர் கேரவனில் இருந்து வெளியே வந்த வீடியோ என கூறப்படும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், முன்னதாக, மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தொண்டர்கள் எண்ணிக்கை அதிகமான காரணத்தால் அதற்கு முன்கூட்டியே அதாவது 3 மணிக்கே தொடங்க வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது எனவே, மாநாட்டுக்கு விஜய் தற்போது ரெடி ஆகப்போகிறார் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்