வெள்ளை வேட்டி, சட்டை… தலையில் தொப்பி.! நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாஸாக வந்திறங்கிய விஜய்.!

தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற உள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார் அக்கட்சித் தலைவர் விஜய்.

tvkvijay

சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ராயப்பேட்டையை சுற்றியுள்ள 15 பகுதிகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர்.

அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சமோசா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை பேக்கிங் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இணைந்து விறுவிறுப்பாக செயல்பட்டனர்.

தற்போது, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற உள்ள இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தடைந்தார். இதுவரை கட்சியின் எல்லா நிகழ்விற்கும் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வரும் விஜய், இம்முறை வெள்ளை வேட்டி, சட்டை என தலையில் தொப்பி அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

அது மட்டும் இல்லமல், இந்த நிலவில் மேசைகள் மற்றும் நாற்காலிகள் அல்லாமல் இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, விஜய் மக்களோடு சேர்ந்து தரையில் அமர்ந்து தொழுகை செய்து நோன்பு திறக்க உள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், தவெக கட்சி சார்ந்த கொடி, பேனர் மற்றும் அக்கட்சியின் தலைவர் முகம் (விஜய்) பதித்த பாதாகைகள் எதுவுமே இப்தார் நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்குள் கொண்டு வரக்கூடாது என்று கண்டிஷன் போடப்பட்டுள்ளது. அதன்படியே ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்