ஒரே மாதிரி பேசிய விஜய் – ஆதவ்… ‘திருமாவின் இரட்டை மனசு வெளிப்பட்டு விட்டது’- விளாசிய தமிழிசை!
விசிக தலைவர் திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டதாக தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், “திருமாவளவனை அம்பேத்கர் விழாவில் கூட பங்கேற்க விடாத அளவிற்கு கூட்டணியில் அவ்ளோ பிரஷர்” ஆனா அவரு மனசு இங்கதான் இருக்கும் என தி.மு.க.வை நேரடியாக அட்டாக் செய்து விஜய் பேசயதும் அதை பார்த்து கைதட்டினார் ஆதவ் அர்ஜுனா.
இதற்கு முன் பேசிய ஆதவ் அர்ஜுனா, மேடையில் திருமா இல்லாவிட்டாலும், அவர் மனசாட்சி இங்குதான் உள்ளது எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருவரும் ஒரே மாதிரி பேசியதற்கு, மேடையில் ஒரு வேடம், திமுகவின் அரசாட்சியோடு ஒரு வேடம் என சுட்டிக்காட்டிய தமிழிசை சௌந்தரராஜன், விசிக தலைவர் திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டதாக விமர்சனம் செய்தார்.
இது குறித்து தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில்,”அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணன் திருமாவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார்.
இன்றைய அரசியல் நாடகத்தில் அண்ணன் திருமா அவர்களின் இரட்டை வேடம். ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே, மேடையில் ஒரு வேடம். இங்கே மன்னர் ஆட்சி நடத்தும் திமுகவின் அரசாட்சியோடு ஒரு வேடம். நேராக செல்லாதது நேர்மையான முடிவா? அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கை முடிவா… அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா?”என்று கேள்விகளை அடுக்கி தமிழிசை திருமாவை விமர்சித்துள்ளார்.
அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணன் திருமாவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறு கிறார்! இன்றைய அரசியல் நாடகத்தில் அண்ணன் திருமா அவர்களின் இரட்டை வேடம் ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே! மேடையில் ஒரு வேடம்!…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) December 6, 2024
மேலும் அவரது மற்றொரு பதிவில், “திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்றும், ஒரு வேடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பக்கமும், மற்றொரு வேடம் விஜய் பக்கம் என திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலுவாக இல்லை என்பதையே இது காட்டுவதாகவும், திருமாவளவனின் உண்மையான நிறம் விரைவில் தெரியவரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
VCK leader @thirumaofficial Thiru Tholthirumavalavan.. A part of INDI alliance declared he is not going to participate in the Book release program on Shri Ambedkerji.. Along with Actor Vijay saying that it will creat Turmoil within their alliance.
But VCK joint sec who spoke in…— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) December 6, 2024