சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை..!

நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அந்த வகையில், அதிகபட்சமாக ஆவடியில் 20செ.மீ மழை பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025