சேகுவேரா நினைவு தினம்: “அடையாள அரசியலில் சிக்கிக் கொள்ளாதவன்”-விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி..!
புரட்சியாளர் சேகுவேராவின் 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டைனாவில் பிறந்தவரும்,மார்க்சிஸ்ட் புரட்சியாளர், மருத்துவர், எழுத்தாளர்,கொரில்லா தலைவர், இராஜதந்திரி மற்றும் இராணுவ கோட்பாட்டாளர் மற்றும் உலகம் முழுவதும் கலாச்சார அடையாளமாகவும் மாறிய சேகுவேரா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா விடுதலைக்காகப் போராடினார். விடுதலைக்கு பின்னர், கியூப நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர்.
அதன்பின்னர் பொலிவியா நாட்டில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்காக தன் நாட்டையும் வகித்த பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு பொலிவியா சென்றார்.இதனையடுத்து,புரட்சியாளர் சேகுவேரா, 1967ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் தேதி, பிடிக்கப்பட்டு,அடுத்த நாள்(அக்.9 ஆம் தேதி) பொலிவிய அரசு படையால், சுட்டுக்கொல்லப்பட்டார்.இதனைத்தொடர்ந்து,ஒவ்வொரு ஆண்டும் அக்.9 ஆம் தேதி அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,இன்று அவரது 54 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,எம்பியுமான திருமாவளவன் அவர்கள்,சேகுவேரா அடையாள அரசியலில் சிக்கிக் கொள்ளாதவன் என கூறியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“சேகுவேரா:அடையாள அரசியலில் சிக்கிக் கொள்ளாதவன். மொழி இனம் தேசம் போன்ற வரம்புகளைத் தாண்டி வல்லாரை எதிர்த்த வல்லவன். ஏகாதிபத்தியத்தின் இடும்பெலும்பை முறித்தவன். உழைக்கும் மக்களால் நேசிக்கப்படும் புரட்சியாளன்”,என்று பதிவிட்டுள்ளார்.
#சே_குவேரா :அடையாள அரசியலில் சிக்கிக் கொள்ளாதவன்.
மொழி இனம் தேசம் போன்ற வரம்புகளைத் தாண்டி வல்லாரை எதிர்த்த வல்லவன்.
ஏகாதிபத்தியத்தின் இடும்பெலும்பை முறித்தவன். உழைக்கும் மக்களால் நேசிக்கப்படும் புரட்சியாளன்.
தோழர் சேகுவேராவுக்கு
விசிக சார்பில் வீரவணக்கம் செலுத்தினோம். pic.twitter.com/3Ek3G0mZ9z— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 9, 2021