கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ.
கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், தொடர்ந்து இந்து மத நம்பிக்கையை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்கள் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இந்து மக்கள் பலரின் மனதை நோகடிக்கும் விதத்தில் இருந்துள்ளது. இதனையடுத்து, கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி அமர்வு மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூகவலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரவுவதை தடுக்க அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…