அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் இருந்த தினகரனை ஊருக்கு காட்டியது நான் -புகழேந்தி விமர்சனம்
அமமுகவின் புகழேந்தி தினகரனை விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விக்கு பின் தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன்,தங்கத்தமிழ்செல்வன் என அமமுக-வில் இருந்து திமுக-விற்கு சென்றனர்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
https://www.facebook.com/100022589406737/videos/514391352657174/
இந்த நிலையில் தினகரனுக்கு பக்கபலமாக இருந்தது புகழேந்திதான்.ஆனால் புகழேந்தி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இவர் அமமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.அப்போது அவர்களுடன் உரையாடலில், நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் இருந்த தினகரனை ஊருக்கு காண்பித்தது புகழேந்திதான். இங்கு யார் கிட்டேயும் போய் நிற்க எனக்கு விருப்பம் இல்லை.ஜெயலலிதா மரணம் அடைந்த போது கூட தினகரன் இல்லை என்று அந்த வீடியோவில் உரையாடினார்.இவரது இந்த பேச்சு அமமுக தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.