தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கனிமொழி கருத்து
Kanimozhi: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விதிமீறல்கள் பல இருப்பதால் தான் அரசு மற்றும் உயர்நீதிமன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்றும் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
Read More: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு… வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!
இந்த தீர்ப்பை திமுக எம்.பி கனிமொழி வரவேற்றுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக, இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டிடும் தீர்ப்பு வந்திருக்கிறது. தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு.
இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக வழிகாட்டும் விதமாக மக்களுடன் நின்ற தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.