கர்நாடகாவில் வெற்றி ! தென் மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி அடையும் – முரளிதர ராவ்
- கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.
- தென் மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி அடையும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக 12 வெற்றிபெற்றது.காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்றது. இதனால் எடியூரப்பா அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் இது குறித்து பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறுகையில், இது வரை கர்நாடகவில் 15 சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மற்றும் மதசர்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடம் இருந்த்து.தற்போது அது மாரி பாஜக பெரும்பாலான தொகுதியில் வெற்றி பெற்று உள்ளது.கர்நாடகவை தொடர்ந்து எங்கள் வெற்றி தென் மாநிலங்களில் தொடரும். தென் மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி அடையும்.அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை பா.ஜ.க. நடத்தி செல்ல முழு பெரும்பான்மையை கர்நாடக மக்கள் தந்து உள்ளனர். பா.ஜ.க. ஆட்சியை இழக்கும் என்று சொன்ன சித்தராமையா அரசியலில் இருந்து விலக வேண்டும்.
கர்நாடகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முழு காரணம் காங்கிரஸ் கட்சியும் சித்தராமையாவும் தான். இந்த வெற்றி முலம் பிரதமர் மோடி, அமீத்ஷா தலைமையிலான பா.ஜ.க. என்று தெரிவித்தார்.