நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி! உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி..

Default Image

சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி.

விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு விசாரணை அவசரமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர் என கூறி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதியாக பதவி ஏற்க வழக்கறிஞர் விக்டோரியா கவுரி தகுதியற்றவர். விக்டோரியா கவுரி பதவி ஏற்புக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் வாதம் முன்வைத்தார்.

நான் மாணவனாக இருந்த பொழுது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். நீதிபதியாக எனது அரசியல் பார்வையை நான் இதுவரை வர விட்டதில்லை அதை விக்டோரியா கௌரி அவர்களுக்கும் பொருத்தலாம் தானே என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விக்டோரியா கௌரி அரசியல் பின்புலம் கொண்டவர் என்பது பிரச்சனை அல்ல. வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை பேசியவர், அவர் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பதுதான் முக்கிய காரணம் என வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தனர்.

விக்டோரியா கௌரி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்கு முன்பாக ஒரு வருடத்திற்கு அவருடைய செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும் என உச்சநீதின்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாக பதவியேற்ற முன்னுதாரணம் உள்ளதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். விக்டோரியா கவுரிக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்