முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! பிறகு மற்ற மொழியை கற்று கொள்ளலாம்….
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தாய்மொழிக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகே, மற்ற மொழியை கற்று கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார்.
சென்னை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில், ஹிந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
அப்போது, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி குறித்தெல்லாம் இளைய தலைமுறைக்கு தெரிவதில்லை என்றார். தாய் மொழியை ஒருபோதும் மறக்ககூடாது என்றும், குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறினார். மம்மி, டாடி, என்ற கூறுவதை காட்டிலும், அம்மா, அப்பா என்று அழைக்கும் வகையில் குழந்தைகளை பெற்றோர் பழக்க வேண்டும் என்றார்.
தாய்மொழிக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்குமாறும், பிறகு மற்ற மொழியை கற்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டம் பிரதமர் மோடிக்கானது மட்டுமல்ல என்றும், அனைத்து மக்களுக்குமானது என்றும், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.