சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் தீவிர ஆய்வு!
கொரோனா தடுப்பு நடவடிக்கை இந்தியா முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்தகம், உணவகங்கள் (பார்சல் மட்டும்) இது தவிர மளிகை, காய்கறி சந்தைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதையும் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.