துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு குரங்கணி காட்டுத்தீ விபத்துக்கு இரங்கல்!

Default Image

 

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  இந்தச் சம்பவம் குறித்து தனது இரங்கலைத்  தெரிவித்துள்ளார்.

குரங்கணி வனப்பகுதியில் 2,000 அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதியில் நேற்று காட்டுத்தீ பற்றியது. இந்தக் காட்டுத்தீயில் சுற்றுலாச் சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கப் போர்க் கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றது. காட்டுத்தீயில் சிக்கி, சென்னையைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காட்டுத்தீயில் சீக்கியவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குரங்கணி தீ விபத்து சம்பவம் குறித்து தனது இரங்கலை, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். அதில், `குரங்கணி தீ விபத்து குறித்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம்தான் அனைத்துக்கும் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்