அதிரும் மெரினா..! அனல் பறக்க போகும் விமான சாகச நிகழ்ச்சி 2024!

மெரினாவில் நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai air show 2024 a

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய விமான படை சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், விமானப் படையினர் இதுவரை மேற்கொண்ட சாதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை பறைசாற்றும் விதமான தகவல் அதில் இடம்பெற்றுள்ளன. நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொது மக்களின் நலன் கருதி நாளை காலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு கூடுதலாக 72பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையைக் காண மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாக மெரினாவை நோக்கிய காமராஜர்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சூலூர், தஞ்சாவூர், அரக்கோணம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு IAF தளங்களைச் சேர்ந்த 72 விமானங்கள் பங்கேற்கிறது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் மாபெரும் வான் சாகச நிகழ்ச்சி என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்