வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் அஞ்சலி..! கூட்ட நெரிசலால் அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிய விஜய்
வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஆளுநர் ரவி, முதல்வர் மு. க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் எம்.பி, காங்கிரஸ் எம்.பி .திருநாவுக்கரசர், சசிகலா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினார்கள்.
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றுவிட்டார். இதனை சைதை துரைசாமியிடம் அவரது மேலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரியப்படுத்தியுள்ளார்.