சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, கண்ணம்மாபேட்டை மயானத்தில் நேற்று இரவு வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்றைய தினம் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் அஞ்சலி..! கூட்ட நெரிசலால் அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிய விஜய்
இந்த நிலையில், நேற்று அஞ்சலி செலுத்த இயலாத திரை பிரபலங்கள் இன்று காலை முதல் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னதாக, நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…