7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்…!இந்திய வானிலை மையம்
கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும், கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.