வேங்கைவயல் வழக்கு… டிஎன்ஏ பரிசோதனைக்கு 4 சிறுவர்களும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உதாஹரவு.!
வேங்கைவயல் வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எடுப்பது தொடர்பாக ஜூலை 14 ஆம் தேதி 4 சிறுவர்களை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.
புறகுகொடை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மலம் சேகரிக்கப்பட்டு சந்தேகப்பட்டு விசாரிக்கப்பட்ட 119 நபர்களின் மரபணு பரிசோதனைக்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து முதலாவதாக 11 பேரின் மரபணு பரிசோதனைக்கு, 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி வழங்கினார்கள், மற்ற 8 பெரும் முதலில் ரத்த மாதிரியை வழங்க மறுத்த நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவர்களது ரத்த மாதிரியும் பெறப்பட்டது. தற்போது வரை இந்த வழக்கில் 21 பேரின் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராமங்களைச் சேர்ந்த 4 சிறுவர்களின் டிஎன்ஏ பரிசோதனைக்கு சிபிசிஐடி ஏற்கனவே அனுமதி கோரியிருந்த நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சிறுவர்களின் பெற்றோர்களில் ஒரு சிறுவனின் பெற்றோர் ரத்தம் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து, சிறுவர்களிடம் விளக்கம் கேட்டுப்பெற வேண்டியுள்ளதாகக் கூறி நீதிபதி 4 சிறுவர்களையும் வரும் ஜூலை 14 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்து, வழக்கை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.