கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் இறையூரை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்தனர். பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதலில் இந்த விவகாரத்தை தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த நிலையில் , இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணையை துவங்கி 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுவரை 25 பேரிடம் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது, மனிதக்கழிவு கலந்த தண்ணீரின் மாதிரியில் உள்ள டிஎன்ஏவை ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியிலான ஆதாரங்களை சேகரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை விவரங்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
இதனை அடுத்து இறையுரை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேரிடமும் , வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 பேரிடமும் மரபணு சோதனை மேற்கொள்ள வேண்டும் என சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தனர். தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட 6 நபர்களின் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…