வேங்கைவயல் விவகாரம் – ஒரு நபர் ஆணையம் நேரில் ஆய்வு!

ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வேங்கைவயலில் விசாரணை.
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வேங்கைவயலில் நேரில் கள ஆய்வு செய்து வருகிறார். கள ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உட்பட 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்த கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு நபர் ஆணையம் நேரில் சென்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது. வேங்கைவயலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தனது விசாரணையை தொடங்கியுள்ளது ஆணையம்.