வேகைவயல் விவகாரம்.. குற்றவாளிகள் விரைவில் கைது – சிபிசிஐடி
குடிநீர் தொட்டி விவகாரம் தொடர்பாக 45வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது சிபிசிஐடி.
புதுக்கோட்டை: வேகைவயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் தாக்கீது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. குடிநீரில் மனித கழிவு கலந்தது தொடர்பாக இதுவரை 112 பேரை விசாரித்த நிலையில், 45வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த தேசிய பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நாளை வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.