நான் ரவுடி எல்லம் கிடையாது! அது வெறும் பொம்மை துப்பாக்கி! கபாலி பரபரப்பு வீடியோ!
ஒரு பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சில தினங்களுக்கு முன்னர், ‘ கபாலி என்பவர் BSNL நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.’ என பதிவிட்டு, அவர் துப்பாக்கியுடன் மிரட்டும் தொனியில் எடுத்த விடீயோவையும் பதிவிட்டு உள்ளார்.
அந்த நபர் பெயர் கபாலி என்ற கபாலீஸ்வரன். இவர் வேலூர் காட்பாடியை சேர்ந்தவர். ஓவர் நாமக்கல்லை சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பெண் தான் இப்படி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தொடர்பாக கபாலி கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் முன்னிலையில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், ‘ நான் ரவுடி எல்லாம் இல்லை. நான் வைத்து இருந்தது வெறும் பொம்மை துப்பாக்கி. நான் பொதுமக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.’ என கூறினார். மேலும் கூறுகையில், ‘எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. மனைவி சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை இந்தியா வரவைப்பதற்காக தான் இந்த வீடியோ வெளியிட்டு இருந்தேன். இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்.’ என வீடியோ மூலம் கூறியிருந்தார்.