சாலையில் லிப்ட் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை! பொதுமக்கள் சாலை மறியல்!
வேலூர் மாவட்டம் கீழ ஆவதம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் சென்று கொண்டிருந்த மின்னல் கிராமத்தை சேர்ந்த வினோத் மற்றும் பார்த்திபன், தட்சணாமூர்த்தியிடம் லிப்ட் கேட்டுள்ளனர்.
இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, தட்ச்சனாமூர்த்தியை, வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பலமாக தாக்கியதில் தட்ச்சனாமூர்த்தி உயிரிழந்தார். கொலையாளிகள் வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அங்கிருந்த தப்பித்து ஓடிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கீழ ஆவதம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் பொதுமக்களிடம் சமாதானம் கூறி, கொலையாளிகளை விரைவில் பிடிப்பதாக கூறி உறுதியளித்த பிறகு அங்கிருந்தது கலைந்தது சென்றனர்.
பிறகு வினோத் மற்றும் பார்த்திபன் சென்ற வாகன தடம், செல்போன் சிக்னல் என பலவற்றை ஆராய்ந்து கொலையாளிகள் இருவரும், செய்யூரில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பிறகு, அவர்களை பிடித்து அரக்கோணம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
DINASUVADU