தினகரனை வைத்து பழைய எதிரி பா.மா.கவை தோற்கடிக்க திட்டம் தீட்டும் வேல்முருகன்!!
- பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தமிழர் வாழ்வுரிமை கட்சியை ஆரம்பித்த வேல்முருகன் தற்போது புதிய திட்டத்தை தீட்டி உள்ளார்
- இருபெரும் கட்சிகளுக்கு இடையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் வேல்முருகன்
வெளிப்படையாக மோடிக்கும், எடப்பாடிக்கும் எதிராக வேல்முருகன் பேசினாலும், அவரது நேரடி எதிர்ப்பு ராமதாஸ் மட்டும்தான். ராமதாஸை எதிர்ப்பதற்கு தன்னை தி.மு.க. பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், வேறு வழியில்லாமல் தற்போது தினகரனிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
இதனை ஏற்க மறுத்த என டிடிவி தரப்பு, அவருக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும் கராராக சொல்லி விட்டதாம். ஆனாலும், எங்களுக்கு 7 சீட் கொடுங்கள. பா.ம.க. நிற்கும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறாராம் வேல்முருகன். இதனால், குழப்பமடைந்துள்ள டிடிவி தினகரன், அவரது கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளாராம்.