வேலூரில் தொடங்கியது வாக்குப்பதிவு !133 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பாக கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பாக ஏ.சி.சண்முகம்,நாம தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமி உட்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், 14.32 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் .மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,32, 555 ஆகும் .
இதில் ஆண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,01,351 , பெண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,31,099, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 105 ஆகும்.6 சட்டமன்ற தொகுதிகளில் 1553 வாக்குச்சாவடி மையங்கள் ஆகும் . இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் 133 ஆகும்.இன்று நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 9-ஆம் தேதி நடைபெறுகிறது.