வேலூர் மக்களவை தேர்தல் : 3 மணி நிலவரப்படி 52.32 சதவிகிதம் வாக்குகள் பதிவு
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.3 மணி நிலவரப்படி 52.32 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
மதியம் 3 மணி நிலவரம் :
வேலூர் – 54.93% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
அணைக்கட்டு – 62.76% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
கே.வி.குப்பம் – 55.52% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
குடியாத்தம் – 44.38% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
வாணியம்பாடி – 46.71% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
ஆம்பூர் – 50.86% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.