#Breaking:இனி ஆட்டோக்களில் இவை கட்டாயம்;மீறினால் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!

வேலூர்:ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிறார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்:
இதனைத் தொடர்ந்து,வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்களுடன் காவல்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிரடி உத்தரவு:
இந்நிலையில்,இனி ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இனி இவை கட்டாயம்:
அதன்படி,ஆட்டோக்களின் பின்புறம் ஓட்டுனரின் ஐடி நம்பர் ,உரிமையாளர் பெயர்,போன் நம்பர்,முகவரி ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும்,இக்கட்டுப்பாடுகளை மீறும் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025