#BREAKING : வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாடுமுழுவதும் நடந்த மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களிலும் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால் வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .
இதனிடையில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் .ஜூலை 11 முதல் 18 வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும் ஜூலை 19 -ஆம் தேதி மனு மீது பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 22 ம் தேதி கடைசி தேதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.