ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்!உடனடியாக நடத்த வேண்டும் -ஏ.சி.சண்முகம் மனு
வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஏ.சி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளதுமூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இதனால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் தொகுயில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவதாக இருந்தது.ஆனால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில் டெல்லியில் வேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி தேர்தல் ஆணையர்களை சந்தித்தார் ஏ.சி. சண்முகம் .மேலும் வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளிடம் அவர் மனு அளித்தார்.