வேலூர் மக்களவை தேர்தல் ! பொதுமக்கள்போதிய அளவு ஆர்வம் காட்டவில்லை!தேர்தல் அதிகாரி

வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின்னர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.5- ஆம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.
வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்கள் .கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. நேற்று வேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் வாக்கு அளித்தார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மொத்தமாக வாக்குபதிவு நடைபெற்றபோது 22 விவிபாட் இயந்திரங்கள் பழுதானது.வேலூரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலை விட வாக்குபதிவு அளவு 4% குறைந்துள்ளது. பொதுமக்கள் 100 சதவிகித வாக்குப்பதிவுக்கு போதிய அளவு ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிகிறது என்று தெரிவித்தார்.