வேலூரில் ஐடி ரெய்டு : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

Published by
Venu

வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை  மேற்கொண்டனர்.அதுபோல்  காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மேற்கொண்டனர்.

Image result for துரை முருகன் வீட்டில் சோதனை

மேலும்  தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர் .பின்னர்  துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.இதில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பின்  துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேலூரில் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மேலும் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு கூறுகையில்,மாஜிஸ்திரேட் அனுமதி அளித்ததும் வழக்கு பதிவாகும்.எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் .அறிக்கை அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தல் குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மீண்டும் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,  வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அதேபோல்  வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171(E)-, 171 (B)(2) IPC. 125(A)PPL ACT ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

3 mins ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

21 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

50 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

1 hour ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

1 hour ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

1 hour ago