பின்வாங்கிய தினகரன்,கமல்ஹாசன் !வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியில்லை
வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
ஆனால் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறுகையில்,வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை. அடுத்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் நம்பிக்கையின்மையை காப்பது மிகமுக்கியம் என்பதால் அதில் முழுக்கவனம் செலுத்தஇருக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ள நிலையில் தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடாத நிலையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.