வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு தொடக்கம்…….!!!
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க வெல்ல முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்திய தொழில் நுட்ப மையம் உள்ளிட்டவைகள் ஒன்றிணைந்து புதிய அமைப்பை உருவாக்கி உள்ளது என்றும் வெள்ள அபாயம், வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களை 5 நாட்களுக்கு முன்பே கண்டறிந்து ஆபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் உள்ள எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.