வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல்..! 10 மாணவர்கள் கைது.!
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாணவர்களிடையே நடைபெற்ற மோதலின் போது மாணவர்கள் விழா காலங்களில் வெடிக்கும் வெடியை வீசி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இது சம்பவம் தொடர்பாக 1 மாணவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 10 மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.