வேளச்சேரி விபத்து – இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது..!

arrested

சென்னை வேளசேரி கேஸ் பங்க் அருகே கடந்த 4-ஆம் தேதி  கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மேலும் 8பேர் விபத்தில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது இதனை அடுத்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். விபத்தில் சிக்கிய 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய நரேஷ், ஜெயசீலன் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. எடப்பாடி பழனிசாமி கூறிய காரணத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட்!

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கட்டுமான விபத்தில் தவறு செய்தவர்களை தப்பிக்க விடமாட்டோம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி இந்த விபத்தில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர் எழில், சந்தோஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu