வாகன எண்ணை கூறினால் வழக்கமான போட்டோஷாப் வேலையா இல்லையா சொல்ல இயலும் – அமைச்சர் செந்தில் பாலாஜி
வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும் என செந்தில் பாலாஜி ட்வீட்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவாகனத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, கிறித்தவமயமான TNEB என் அப்பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. வாகன எண் 0052’ஆக இருக்காது என நம்புகிறேன். வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும்.’ என பதிவிட்டுள்ளார்.
ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. வாகன எண் 0052’ஆக இருக்காது என நம்புகிறேன்.
வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும்.. https://t.co/mLFxanqvaK
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 14, 2022