வாகன உரிமங்களை புதுப்பித்தல்! கால அவகாசம் கொடுத்த தமிழக அரசு!
ஆம்னி பேருந்து முதல், மேக்சி கேப் சரக்கு வாகனம் வரை வாடகை வாகனங்களின் வரியை செலுத்த கூடுதல் அவகாசம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், கடந்த இரண்டு மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், வாகன பதிவை புதுப்பித்தல், சாலை வரிகளை செலுத்துதல் ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, வாகனங்களை புதுப்பிக்க முடியாமல் தவித்த வாடகை வாகன உரிமையாளர்கள், அதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த பிப்ரவரியில் முடிவடைந்த வாகன உரிமங்கள், செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லும் என அறிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்னி பேருந்து முதல், மேக்சி கேப் சரக்கு வாகனம் வரை வாடகை வாகனங்களின் வரியை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.