கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்தது.இதனால் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கனி சந்தை திறக்கப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையை திறக்க கோரி, வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் திங்கள் கிழமை ( ஆகஸ்ட் 10 ) ஒருநாள் காய்கறிகள் , பூ மார்க்கெட் மற்றும் பழக்கடைகள் அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.மேலும் மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளை திறக்ககோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…