நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படயுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு 044 22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் உள்ளாட்சி துறை மற்றும் கூட்டுறவுத் துறை இணைந்து காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படும்.
முழுஊரடங்கு காலத்தில் சென்னை மாநகரில் 1610 வாகனங்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 2228 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் தினசரி விநியோகம் செய்யப்படவுள்ளது.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…