வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Vithya Rani - NTK

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி, நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவருக்கு உடனடியாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய நபராக வலம் வந்த நிலையில், இன்று மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, சமீப நாட்களாக கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், வித்யா ராணிக்குப் மாநில அளவில் பொறுப்பு வழங்கியது இந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக சமீபத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காளியம்மாள் இருந்த பதவியில் இப்பொது நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் தொகுதி, 133ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெணிட்டா மேரி என்பவருக்கு மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்