தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் – முதல்வர் பழனிசாமி
தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மன்.
தமிழகத்தில் ஆங்கில ஆட்சியை எதிர்த்து போரிட்ட மன்னர்களுள் வீரப்பாண்டிய கட்டபொம்மனும் ஒருவர் ஆவார். இன்று இவரது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில், கட்டபொம்மனின் வீரத்தை போற்றி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து “என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது”என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.